Pages

தியானம்: கோபத்தை விலகி நின்று கவனி!

நடனம், சிரிப்பு, உடலசைவு, மூச்சுவிடுதல், மூச்சைக் கவனித்தல், ஒளியைக் கவனித்தல்....என்ன இது? ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? தொடர்பில்லாத விஷயங்கள் இல்லை இவை. இவையெல்லாம் தியானப் பயிற்சிகள்.

சென்னையில் ஓúஸô சுராஜ் மெடிடேஷன் சென்டரை நடத்தும் ஸ்வாமி பரிபூரானந்த் கடந்த 24 ஆண்டுகளாக இத்துறையில் பரிச்சயம் உள்ளவர். புணேயில் உள்ள ஓஷோ கம்யூன் இன்டர்நேஷனலில் இதற்காகப் பயிற்சி பெற்றவர். இந்தத் தியானப் பயிற்சிகளைக் கடந்த 16 ஆண்டுகளாகப் பிறருக்கு அளித்து வருகிறார்.

இந்தப் பயிற்சிகளினால் என்ன நன்மை? இப்படிப்பட்ட பயிற்சிகள் எல்லாம் இந்த நவீனயுகத்தில் தேவைதானா? என்று அவரிடம் கேள்விகளை அடுக்கினோம். கொஞ்சமும் பதட்டப்படாமல் அவர் அளித்த பதில்கள் உங்கள் பார்வைக்காக....

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் மெüனம் என்று பொருள். இந்த மெüனம் நமது தாயின் கருவறையில் இருக்கும் போது நம்முடன் இருந்தது. மனிதன் பிறந்து வளர வளர இந்த மெüனம் மனிதனுக்குள் மறைந்து விடுகிறது. ஆனால் இந்த மெüனம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது புதிதாக ஏற்படுத்தப்படுவது அல்ல. மதரீதியான காரணங்களாலும், வேலைரீதியான காரணங்களாலும், குடும்பரீதியான காரணங்களாலும் நமது மனதில் அழுத்தம் சேர்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக நமது மனதில் குடி கொண்டிருக்கும் மெüனத்தை நம்மால் உணர முடியவில்லை. அந்த அழுத்தங்களை வெளியேற்றி நம்முள் உறைந்திருக்கும் மெüனத்தை வெளிக் கொண்டு வருபவைதான் தியானப் பயிற்சிகள்.

மனம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. மனதைத் தேவையான போது இயங்கவிட்டு பிற நேரங்களில் அதை நிறுத்தி வைக்க முடியும். அதற்குப் பயன்படுவது தியானப் பயிற்சிகள்.

தியானப் பயிற்சிகள் என்று சொல்கிறீர்கள். எத்தனைவிதமான தியானப் பயிற்சிகள் உள்ளன?

ஓஷோ 112 "விஞ்ஞான பைரவ தந்த்ரங்'களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ரமண மகரிஷி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர் உடல் வேறு; உணர்வு வேறு என்று இருக்க முடிந்திருக்கிறது. ஓஷோ சொன்ன 112 தந்த்ரங்களில் இதுவும் அடங்கியிருக்கிறது. இந்த 112 தந்த்ரங்கள் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாங்கள் சொல்லித் தருபவற்றை 21 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து அதில் உங்களுக்குப் பொருந்திப் போகும் பயிற்சிகளை மட்டும் தொடர்ந்து மூன்று மாதம் செய்துவர வேண்டும். அதன்பின் நேரம் கிடைக்கும் போது - தோன்றிய போது செய்யலாம்.

நாங்கள் டான்ஸ், சிரிப்பு தியானம், நாதப்ரம்மம் தியானம், உடலசைவு தியானம்(குண்டலினி தியானம்), மூச்சுவிடுதல் தியானம், ஹு மந்த்ரா, மூச்சைக் கவனித்தல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். ஒரு நாள் தியானப் பயிற்சி எனில் குறைந்தது 5 தியானப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம்.

தியானப் பயிற்சிகளினால் என்ன பயன்?

இன்று வாழ்க்கையில் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கால்சென்ட்டர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு டென்சன் அதிகம். அவர்களுக்கு வருமானமும் அதிகம். அவர்களில் பலர் நெருக்கடிகளைச் சமாளிக்கப் போதையில் மூழ்குகிறார்கள். பல தீய பழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் டென்சனைக் குறைக்கவும், தீய பழக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும்.

ஓஷோவின் தியானப் பயிற்சிகள் என்றில்லை. பொதுவாக எந்தத் தியானப் பயிற்சிகளும் நல்ல பலன்களைத் தரவே செய்கின்றன. நான் சொல்லும் தியானப் பயிற்சி மட்டும்தான் சரியானது என்று சொல்ல மாட்டேன். நான் சில தியானப் பயிற்சிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.

பிற தியானப் பயிற்சிகளுக்கும் நீங்கள் தரும் தியானப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?

இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பிற தியானப் பயிற்சிகளில் தியானம் என்றால் அதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இலக்கு எதுவும் எங்களின் பயிற்சியில் இல்லை. புதிதாக அடைய எதுவும் இல்லை. ஏற்கெனவே மனிதனுக்குள் இருக்கிற மெüனத்தை மனிதனுக்கு ஞாபகப்படுத்துவதுதான் இந்த தியானப் பயிற்சிகள். இந்தப் பயிற்சிகள் மனிதனுக்குள்ளிருக்கும் தேவையில்லாத அழுத்தங்களை வெளியேறுகின்றன.

பிற தியானப் பயிற்சிகளில் மனிதனுக்கு எது எது பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்யக் கூடாது என்பார்கள். மனிதனுக்குப் பிடித்ததைச் செய்யாவிட்டால் மனிதனாக இருந்து என்ன பயன்? நம்மை வருத்திக் கொள்வது தியானமல்ல. உண்ணா நோன்பிருந்து தியானம் செய்யும் போது மனதில் உணவைப் பற்றிய எண்ணமே இருக்கும். ஏனெனில் உணவு மனிதனின் உடல் தேவை. எனவே மனிதன் தன்னை வருத்திக் கொண்டு தியானம் எதுவும் செய்யக் கூடாது.

சமூகக் காரணங்களாலும் மற்றும் பலவிதக் காரணங்களாலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும் முயற்சிப்பதுதானே சரி. அதை விட்டு விட்டு அந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் மனதளவில் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான தியானப் பயிற்சிகளைச் செய்வது சுயநலமில்லையா? சமூகப் பொறுப்பில்லாதத் தன்மையல்லவா?

சமூகம் என்பது யார்? பல தனிமனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் சமூகம் உருவாகிறது. அந்தத் தனிமனிதர்கள் தங்கள் அளவில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே அது சமூகத்திற்கு நன்மைதானே?

மேலும் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கான வேலைகள் ஒருபுறம் நடக்கட்டும். அவரவருக்குரிய வகையில் அவற்றைச் செய்யட்டும்.
அந்த வேலைகளைத் தனிமனிதன் ஒருவன் சிறப்பாகச் செய்யவே இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும். எப்படி என்கிறீர்களா?

ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்குக் கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோபம் சரியானது. அதை அடக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் அந்தக் கோபத்தில் மூழ்கிவிடவும் வேண்டியதில்லை. அந்தக் கோபத்தை விலகி நின்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கோபத்தைச் சரியானபடி கையாள முடியும். அவ்வாறு சரியானபடி கையாளும்போது பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படாது.

கோபம் என்றில்லை, நமது எல்லா உணர்வுகளையும் கவனிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த உணர்வையும் கட்டுப்படுத்தக் கூடாது. அதை அடக்கக் கூடாது. மாறாக அதைக் கவனிக்க வேண்டும். அதைக் கவனிக்கும் போது நல்லது கெட்டது தெரிய ஆரம்பித்துவிடும்.

கோபம் உட்பட பலவித உணர்வுகளையும் நெறிப்படுத்த முடியாத ஒரு மனிதன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? அதற்கு எங்கள் தியானப் பயிற்சிகள் உதவும்.

மேலும் பலவிதக் காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளான மனிதன் போதை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தடுப்பதே இந்தத் தியானப் பயிற்சிகளின் சமூகப் பங்களிப்பல்லவா?

உங்களைப் பின்பற்றினால் சமூகப் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்கிறீர்களா?

எங்களைப் பின்பற்றுங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓஷோவே தன்னை யாரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பியது கிடையாது. "நீ நீயாக இரு' என்பதுதான் ஓஷோவின் கருத்து.

"நீ பிறரை மாதிரி இருக்க நினைக்காதே. உன்னை மாதிரி நீ இரு'' என்பதே அவர் கருத்து.


நன்றி: தினமணி கதிர்!
தினமணி கதிரில் (11/25/2007) வந்த கட்டுரை [பயிற்சி: கோபத்தை விலகி நின்று கவனி! -- ந.ஜீவா]

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - II

எப்பொழுதும் இந்தியா வரும்பொழுது, விமான நிலையத்தில் சாஷ்டாங்கமா விழுந்து 'தாய் மண்ணே வணக்கம்'  ரகுமான் மாதிரி பாட ஆசைதான்! ( 'சின்ன சின்ன ஆசை' பட்டியலில் இதயும் சேர்த்துக்கணும்.).

ஒவ்வொரு முறையும் போறப்ப ஏகப்பட்ட மாற்றங்கள்! பிடிச்ச விசயங்கள் இருந்தாலும்,  டாப் 5 பிடிக்காத விசயங்கள் என்னனு பார்த்தா..

1)  'சென்னை ஆட்டோகாரர்களிடம் பேசுவது எப்படி?' Dummy series ஏதும் இருந்தா அத வாங்கி படிக்கணும். வர வர நம்ம மக்கள்கிட்ட சகிப்புத்தன்மை குறைஞ்சிகிட்டே வருது.

தீவிரவாதம்கிறது என்ன....மனுசனை மனுசனை மதிக்காமல் இருப்பதுதான....!

ஆட்டோ ஓட்டுநர்கள், நடத்துனர்கள்னு ஆரம்பிச்சி கோயில், குளம்னு தொடர்ந்து, திரையங்குகள், சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் யாரும் யாரையும் மனுசனா மதிச்சி பேசுறதில்ல. குறைந்தபட்ச மரியாதகூட கிடையாது. சின்ன விசயங்களுக்கலாம் எரிந்து விழுவது, ஏமாற்றுவது.

இலட்சம் இலடசமா சம்பாதிரிக்காங்களே குடுத்தா என்னகிற மாதிரிதான் பேச்செல்லாம். எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டலாம்கிற எண்ணம்!

2) 'நானே பிரதானம்'கிற எண்ணம்! பொது இடங்களில், சக மனிதனைப்பற்றிய அக்கறை குறைந்துகொண்டே வருவது.

3) நம்ம ஊரில இருக்கிற குப்பைகள்! கோயில்கள்,   மருத்துவனை என்று குப்பை தொட்டிகளுக்கு பஞ்சம். மக்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வு எடுப்பதற்கான அறிகுறியும் இல்லை.

4) வார நாட்கள்னா தொலைகாட்சி மெகா தொடர்கள்,  வார இறுதி அல்லது விடுமுறையென்றால் சினிமா, சினிமா, சினிமா....!  வேற பொழுது போக்கே இல்லை.

5) உலகில் ஒரு பக்கம்,  சொந்த பிள்ளைங்க தண்ணி எடுத்து வந்து கொடுத்தாலும், மூச்சுக்கு முன்னுரு முறை நன்றி சொல்லும் மக்கள்! அதற்கு மறுபக்கம் 'சாரி', நன்றிகிற வார்த்தைகளையே மறந்த நம்மவர்கள்!


பி.கு: இந்த பட்டியலில் சாதி, மதம், ஏழ்மை, இலஞ்சம் போன்ற 'சின்ன சின்ன' விசயங்களைலாம் கணக்கில எடுத்துக்கலை!.

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - I

ஐந்து வாரம், ஆறு வாரம் விடுமுறைலலாம் இந்தியாவுக்கு போனது கனவாக இருக்கு. இந்த முறை இரண்டு வாரம்தான்!

* சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 'இன்டர்நெட் செக்இன்' ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த வரிசையில கூட்டமே இல்லை! (ஆனா சென்னைல இருந்து கிளம்பிறப்ப 'இன்டர்நெட் செக்இன்' வரிசைல பெரிய Q!!)

* Check-in luggage எடையவிட 'Hand luggage' எடையதான் கண்ணும் கருத்துமா பாக்குறாங்க. ஏழு கிலோவுக்கு மேல இருந்தா 'படுத்தி எடுத்துறானுங்க'!

* Flightல சீட்டுக்கு முன்னாடி (கொஞ்சம்) பெரிய திரை! எல்லாமே டிஜிட்டல்! பாட்டு கேக்க நமக்குன்னு 'My Favourities' பட்டியல போட்டு வைச்சுக்க வசதி. இதலாம் இந்த 12-14 நேர பயணத்திற்கு! Ipod சார்ஜ் பண்ணறதுக்குன்னு தனியா USB port!

* குழந்தைக்கான கார்ட்டூன்கள்/படங்கள் ரொம்பவே கம்மி!

* தமிழிலில் அபியும் நானும், தசாவதாரம், சரோஜா! இந்தியில ஆர்வமா பார்க்கிறமாதிரி இல்ல (ஜெனிலா நடித்த படம் இருந்தது).

* ஆங்கிலத்தில் நான் பார்க்கணும் நினைச்ச சில படங்கள் இருந்தது. The Reader, Benjamin Button, Gran Torino, Doubt, Paul Blart: Mall Cop; The Reader, Doubt பார்க்க முடிஞ்சது. Doubt - ஏமாற்றம், ஆனா Merly Streep acting amazing; 'The Reader' - விமானத்தில பார்க்ககூடிய படமல்ல. Kate Winselt க்கு ஆஸ்கார் வாங்கி குடுத்த படம். would like to watch one more time. முடிவை ஒரளவு தீர்மானிக்க முடிந்தாலும், கொஞ்ச நேரம் மனதை ஏதோ செய்த படம்.

* ஒரு தடவைக்கு மேல Vodka/Whisky....யோ கேட்டா 'ஒரு மாதியா'லாம் பாக்கிறதில்ல. ஆனா இந்த முறை 'Bloody Mary' mixing சரியில்ல.

வாரணம் ஆயிரம்

'வாரணம் ஆயிரம் பார்க்க சூர்யாவும் வரான்'னு தெரிந்தவுடன், (வீட்டின்) தானயத் தலைவி, 'வாரணம் ஆயிரம் போலாமா?'னு கேட்க, வேண்டாம்னு சொன்னாலும் கேக்க போறதில்ல.

தியேட்டரில் ஏகப்பட்ட கூட்டம். 'என்னைப்போல'  மனைவிக்காக சூர்யாவை பார்க்க வந்தவர்கள் ரொம்ப பேர் போல..!

'ஜோ' மிஸ்ஸிங்!

படத்தோட தலைப்பு (மட்டும்தான்) தமிழ்! மத்தபடி, படத்தில வர தமிழ் வசனங்கள் கம்மி தான்!

வழக்கம்போல படம் வெளிவந்த இரண்டு மணி நேரத்திலலேயே  வலைப்பூவில், இணையத்தில்,  டிவிட்டரில்னு படத்தை நம்ம மக்கள் அலசி ஆராய்ச்சிட்டாங்க! என் பங்குக்கு ஒரு 10 டாலர்.........இல்ல 2 சென்ட்!

வழக்கமா தமிழ் சினிமாக்குன்னு இருக்குற பார்முலாதான்!
கல்லூரி கலாட்டா...
ஒரு பாட்டிலயே  வீட்டை கட்டி, கதாநாயகன் பெரிய ஆளாகிறது...
காதலிய தேடி கிளம்புறது ...

இப்படி ஒரு பட்டியல் போடலாம். ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் சுதா ரகுநாதன் கச்சேரிக்கு போக, இதுல அட்டகாசமான ஒரு பாட்டு!!

'ஆஹா....சூப்பர்!!'னு சொல்ல தோணவில்லை என்றாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சில நேரங்களில், படத்தைவிட (சில) விமர்சனங்கள் அருமையாக இருக்கு!
உதாரணத்திற்கு:

"சாத்தான்"குளத்து வேதம்
தனிமையின் இசை
ஜெஸிலாவின் கிறுக்கல்கள்
செப்புப்பட்டயம்


பி.கு; விகடன் ப்ளாக்குல பார்த்துதான் விமர்சனம் எழுதுறாங்களானு சந்தேகமா இருக்கு. மார்க்கு மட்டும் பரிசு குடுக்காம பேசாம வாசகர்களுக்குகிட்டேயே விமர்சனம் எழுத சொல்லி பரிசு அறிவிக்கலாம்.'விமர்சன குழு'  எழுதுறதை விட சிறப்பாவே இருக்கும்!

நவம்பர் 21, 2008

போகிற போக்கில்...

பரவாயில்லை..'இந்த தடவையும்' தேர்தல் நேரத்தில ஊருல இருக்கோம்...ஓட்டு போடலாம்னு ஒரு நினைப்பு இருந்தது.
'நாம போற நேரத்தில பிரச்சாரம் சூடு பிடிச்சிருக்கும். நம்ம ஆளுங்க பட்டைய கிளப்பிகிட்டு இருப்பாங்கனு' போனா.......தேர்தலுக்கான எந்த அறிகுறியும் இல்லாம 'வழக்கம் போல்' இருந்தது நம்ம ஊரு.

அட...! ஒரு பேனர் இல்லை....சுவர்ல விளம்பரம் இல்லை...மைக் சத்தம் இல்லை....எங்க ஊருல யாரு நிக்கிறாங்கனே பத்திரிக்கையில பார்த்துதான் தெரிஞ்கிட வேண்டியதா போச்சி! வாழ்க தேர்தல் கமிசன்!!

கடைசி வரைக்கும் யாருக்கு ஓட்டு போடுறதுனு dilema..
பாண்டியராஜனுக்கா....வை.கோவுக்கா னு?

ஒரு வழியா வை.கோவுக்குனு முடிவு பண்ணி காலையிலேயே பூத்துக்கு போனா, listல நம்ம பேரு இல்ல.
வாழ்க தேர்தல் கமிசன்!!

பி.கு: 1. என்னைப் பொறுத்த வரையில், வை.கோ தோற்றது ஏமாற்றம்தான்.
பேசின வரைக்கும், வை.கோ மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. கைப்புள்ள பாணில நம்மகிட்ட திருப்பி கேக்குறாங்க, 'இன்னுமா அவரை நம்பிகிட்டு இருக்கீங்க!!'...

2. தி.மு.க./காங்கிரஸ் தலைக்கு 300ரூபாய் குடுத்தது வீண் போகலை!

ARR at Tonight show with Jay Leno

வெற்றி வாசல் 2008