Pages

புதன், மே 27, 2009

போகிற போக்கில்...

பரவாயில்லை..'இந்த தடவையும்' தேர்தல் நேரத்தில ஊருல இருக்கோம்...ஓட்டு போடலாம்னு ஒரு நினைப்பு இருந்தது.
'நாம போற நேரத்தில பிரச்சாரம் சூடு பிடிச்சிருக்கும். நம்ம ஆளுங்க பட்டைய கிளப்பிகிட்டு இருப்பாங்கனு' போனா.......தேர்தலுக்கான எந்த அறிகுறியும் இல்லாம 'வழக்கம் போல்' இருந்தது நம்ம ஊரு.

அட...! ஒரு பேனர் இல்லை....சுவர்ல விளம்பரம் இல்லை...மைக் சத்தம் இல்லை....எங்க ஊருல யாரு நிக்கிறாங்கனே பத்திரிக்கையில பார்த்துதான் தெரிஞ்கிட வேண்டியதா போச்சி! வாழ்க தேர்தல் கமிசன்!!

கடைசி வரைக்கும் யாருக்கு ஓட்டு போடுறதுனு dilema..
பாண்டியராஜனுக்கா....வை.கோவுக்கா னு?

ஒரு வழியா வை.கோவுக்குனு முடிவு பண்ணி காலையிலேயே பூத்துக்கு போனா, listல நம்ம பேரு இல்ல.
வாழ்க தேர்தல் கமிசன்!!

பி.கு: 1. என்னைப் பொறுத்த வரையில், வை.கோ தோற்றது ஏமாற்றம்தான்.
பேசின வரைக்கும், வை.கோ மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. கைப்புள்ள பாணில நம்மகிட்ட திருப்பி கேக்குறாங்க, 'இன்னுமா அவரை நம்பிகிட்டு இருக்கீங்க!!'...

2. தி.மு.க./காங்கிரஸ் தலைக்கு 300ரூபாய் குடுத்தது வீண் போகலை!

7 மறுமொழிகள்:

  1. Boston Bala said...

    முன்னூறு ரொம்பக் கம்மியாச்சே!?

  2. தென்றல் said...

    எங்க ஊரு காங்கிரஸ் வேட்பாளரோடு initial 'மு.க' இல்லையே என்ன பண்ணறது.... ;(

  3. கோபிநாத் said...

    \\தென்றல் said...
    எங்க ஊரு காங்கிரஸ் வேட்பாளரோடு initial 'மு.க' இல்லையே என்ன பண்ணறது.... ;(
    \\

    அப்போ சரி..;)))

    ஊர் அனுபவங்களை பத்தி கொஞ்சம் போடுங்க அண்ணாச்சி ;))

  4. தென்றல் said...

    வாங்க கோபிநாத்!

    //அப்போ சரி..;)))//
    இதுக்குதான் மதுரை வாக்களார 'பிறந்து' இருக்கணும்...

  5. காட்டாறு said...

    அப்படியே பட்டாசை கொளுத்தி போட்டுட்டு வந்தீங்களா ராசா?

  6. Santhosh said...

    thallai innum orula than irukingala? illa back to pavilion ah?

  7. தென்றல் said...

    /அப்படியே பட்டாசை கொளுத்தி போட்டுட்டு வந்தீங்களா ராசா?/

    அது மன்மோகன்சிங் மறுபடியும் வந்ததுக்கு...!!

    /thallai innum orula than irukingala? illa back to pavilion ah?/

    Sorry சந்தோஷ்! 2 வார விடுமுறைதான் கிடைச்சது. Back to Office ..;(