Pages

காந்தி

காந்தி - தேசப்பிதா, இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்தவர், தேர்வில் ஐந்தோ,பத்தோ மதிப்பெண் கிடைக்கும் ஒரு முக்கிய வினா என்பதை தவிர பெரிய அபிப்பராயம் இருந்தில்லை.

பின்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை பற்றி தெரிந்து கொள்ளும்பொழுது சில ஆச்சரியங்கள், பல அதிர்ச்சிகள்! இன்னும் கொஞ்சம் 'ஆழமாக(!)' படிக்கும்பொழுது இந்த ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் சேர்ந்து குழப்பமே அதிகமாயின தவிர புரிந்தபாடில்லை.


அடிக்கடி நம்முடைய 'தலைவர்கள்' குறிப்பிடும் 'என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்....' னு சொல்வதாலாம் எந்தளவுக்கு காமெடியென்று காந்தியின் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமாவது படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம்.
ஒருபக்கம் - புனித ஆத்மா, தேசத்தந்தை, புனிதர், கடவுள் என்று கட்டப்பட்ட பிம்பங்கள்; மறுபக்கம் - அவரால், அவருடைய கொள்கைகளால் மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட தலைவர்கள்தான் எத்தனைபேர்!

என்னளவில் இன்றும் அவர் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான்!

 'இவளுக்கு எங்க இந்தப்படம் புரிய போகிறது' என்ற எண்ணத்துடன் 'காந்தி'  படத்தை மகளுடன் சேர்ந்து பார்த்தேன். முழுப் படத்தையும் ஆர்வமாக பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.

'என்னமா, புரிஞ்சது'னு கேக்கணும். அதுக்கு ஒரு தனி கதை வச்சிருப்பா.....

ஒரு referenceக்காக இங்கே சில புத்தங்கள் ...

1. Mahatma Gandhi; a great life in brief/Sheean, Vincent

2. The life of Mahatma Gandhi/Fischer, Louis

3. The essential Gandhi : his life, work, and ideas : an anthology / edited by Louis Fischer.

4. Indian summer : the secret history of the end of an empire / Alex von Tunzelmann.

5. India after Gandhi : the history of the world's largest democracy / Ramachandra Guha.

6. Gandhi & Churchill : the epic rivalry that destroyed an empire and forged our age / Arthur Herman. 




வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம! நீ வாழ்க வாழ்க!
                  --- பாரதியாரின் தேசிய கீதங்கள்/41.

We must become the change we want to see. - MK Gandhi

ஜனவரி 30 - காந்தி நினைவு நாள்.

1 மறுமொழிகள்:

  1. said...

    \\என்னமா, புரிஞ்சது'னு கேக்கணும். அதுக்கு ஒரு தனி கதை வச்சிருப்பா.....\\

    இதை முதல்ல போடுங்க அண்ணே ;)))