Pages

சனி, அக்டோபர் 27, 2007

மணிச்சித்திரதாழ் - அப்தமித்ரா - சந்திரமுகி - பூல் புலயா

மணிச்சித்திரதாழ் 14 வருடத்திற்கு முன் வந்த படம். கேரளாவில் 600 நாட்கள் ஓடியது...

பாசில், மோகன்லால், ஷோபனா, நெடுமுடி வேணு, திலகன், இன்னோசண்ட், KPAC லலிதா [மறைந்த இயக்குநர் பரதனின் மனைவி (தேவர் மகன், ஆவாரம் பூ) ] .....இப்படி திறமையான நடிகர்கள்....நடிகைகள்...

வித்தியாசமான கதை...அதற்கு சொந்தக்காரர் மது முட்டம் .... திரையில் தெளிவாக கொண்டு சென்றது பாசிலின் இயக்கம்.....

ஷோபனாவின் நடனம், நடிப்பு.... (தேசிய விருது வாங்கி கொடுத்தது)

மோகன்லாலின் காமெடி...

நெடுமுடி வேணு, திலகன், KPAC லலிதா, இன்னோசண்ட் ... இவ்ர்களின் நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லதேவையில்லை... அருமையான கலைஞர்கள்!
இதை பி.வாசு அப்தமித்ரா, சந்திரமுகி என்று கன்னடத்திலும், தமிழ்/தெலுங்கிலும் எடுத்து வெற்றி படங்களாக்கியவர்...

அப்தமித்ரா .. படம் பார்க்கவில்லை...அதனால் சொல்றதுக்கு ஒன்றுமில்லை...

சந்திரமுகி ... சூப்பர் ஸ்டார் படம் .... சும்மா வந்தாலே படம் 100 நாட்கள் ஓடும்..(ஜப்பானிலும்..). அவருக்கு இப்படி ஒரு அழுத்தமான கதை தேவையில்லைதான்...ஆனால், சந்திரமுகியின் இறுதிக்காட்சி பார்த்துட்டு 'என்ன கொடுமையிது சரவணா?' என்றுதான் தோன்றியது...

மணிச்சித்திரதாழின் கதையே அந்த இறுதிக்காட்சிகள்தான்.

அதையே தமிழில் எடுக்கும்போது அப்படியே எடுக்கவேண்டியதுதானே...அந்த கதையை 'சிதைத்த' பெருமை பி.வாசுவுக்கும், சூப்பர் ஸ்டார் (??) க்குமே! ம்ம்ம்..அது சரி...சின்னதம்பி எடுத்த உங்ககிட்ட அதுக்குமேல 'எதிர்பார்க்கிறதும்' தப்புதான்!!

இப்பொழுது அந்த படத்தை இந்தியில் பிரியதர்ஷன் பூல் புலயா (Bhool Bhulaiyaa) ஆக வெளிவந்துள்ளது...

பிரியதர்ஷன்.. மணிச்சித்திரதாழின் உதவி இயக்குநரில் ஒருவர்.... தமிழில் 'சிறைச்சாலை' தவிர இவர் நல்லதொரு படம் எடுக்கவில்லை... ஆனால், மலையாளத்தில் பல வெள்ளி விழா படங்கள் கொடுத்தவர்.... உதாரணத்திற்கு.... போயிங் போயிங், தாளவட்டம், சித்திரம், வந்தனம்,கிலுக்கம்..
அதுவும் (கல்லூரியிலிருந்தே நண்பரான) மோகன்லாலுடன் கூட்டணி என்றால்.....'அல்வா' சாப்பிடுவதுபோல...

ஷோபனா....செளந்தர்யா..ஜோதிகா வரிசையில் வித்யா பாலன்

மோகன்லால்...விஷ்ணுவர்த்தன்..ரஜினிகாந்த்..அக்சய குமார்

சுரேஷ் கோபி..ரமேஷ் அரவிந்த்...பிரபு.. சினய் அகுஜா

வினயா...பிரேமா...நயந்தாரா..அமிஷா படேல்


'பூல் புலயா'வில் இறுதிக்காட்சி எப்படியோ?

4 மறுமொழிகள்:

  1. Doctor Bruno said...

    //'சிறைச்சாலை' தவிர இவர் நல்லதொரு படம் எடுக்கவில்லை... //

    லேசா லேசா !!

    Photography and Screen play (except madhavan flashback) resembled the old 19th century english classics

  2. மங்களூர் சிவா said...

    மலையாளத்துல எல்லாம் பாக்கலை டைரக்டா சந்திரமுகிதான் பாத்தேன்.

    சில 2 அர்த்த காமெடி தவிர படம் நல்லாதான் இருந்தது.
    என்னதான் இருந்தாலும் தலைவர் தலைவர்தான்.

    ஹிந்தில வேற வந்திருக்கா??

    நீங்களே பாத்துட்டு சொல்லிடுங்க!!!!!

  3. Anonymous said...

    மணிச்சித்ரதாழ் தான் முதலில் பார்த்தேன்.சி டி வாங்கி வச்சிருக்கேன். அப்பப்போ பாக்கறதுண்டு. அதனால தானேயோ என்னவோ சந்திரமுகியை அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை.

  4. தென்றல் said...

    வாங்க டாக்டர் பிருனோ!

    லேசா லேசா.... தொலைக்காட்சியில் திரைவானம், திரைதென்றல், திரைவிமர்சனம்னு பார்த்ததால நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை கவனிக்கவில்லை.

    சிவா,
    வாய்ப்பு கிடைத்தால் மணிச்சித்திரதாழ் பாருங்க ....

    /நீங்களே பாத்துட்டு சொல்லிடுங்க!!!!!/
    DVD வந்தா subtitle போட்டுதாங்க இந்தப்படத்தை பார்க்கணும்...! ;)

    // அதனால தானேயோ என்னவோ சந்திரமுகியை அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை.//

    வாங்க, சின்ன அம்மிணி!

    உண்மைதான்!
    (ஆனா... சூப்பர் ஸ்டாரை மட்டும் பார்க்க போற படத்தில கதையெல்லாம் கேட்டு ரொம்ப குழப்பிக்ககூடாது...! ;) )